×

3வது குழந்தைக்கு அதிக சலுகைகள் திமுக எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை

சென்னை: சட்டசபையில் பர்கூர் மதியழகன் (திமுக) பேசியதாவது: இந்திய சுதந்திரத்தின்போது தமிழ்நாடு மற்றும் பீகாரின் மக்கள்தொகை சமமாக இருந்தது. தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடியாகவும், பீகாரின் மக்கள் தொகை 13.5 கோடியாகயும் உள்ளது.

தமிழகத்தின் எதிர்கால நலனையும், தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில், இரண்டு குழந்தைகள் போதும் என்ற கொள்கையை மாற்றி, மூன்றாவது குழந்தைக்கு அதிக சலுகைகள் அறிவித்து ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 3வது குழந்தைக்கு அதிக சலுகைகள் திமுக எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : DMK MLA ,Chennai ,Barkur Mathiyazhagan ,DMK ,Indian ,Tamil Nadu ,Bihar ,
× RELATED திருப்போரூர் பகுதியில் இயங்கும்...