×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து!

சென்னை: சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (29.4.2025) காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகளின் போது சிறப்பான முறையில் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார். எதிர்க்கட்சி கொறடா வேலுமணி. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், கொங்கு தேசிய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவஹிருல்லா. தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Police Department ,Fire and ,Department ,K. ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...