×

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமத்துவ பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி!: சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமத்துவ பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமயபுரம் அடுத்துள்ள நடுஇருங்களூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  போட்டியை திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 450 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்துக் கொண்டார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,  காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வளையக்காரனூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. …

The post திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமத்துவ பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி!: சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu competition ,Samatwa Pongal ,Samayapuram, Trichy district ,Trichy ,jallikattu ,Samatthu Pongal festival ,Samayapuram ,Trichy district ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...