×

சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: 22 பேர் உயிரிழப்பு

சீனா: சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். லியாவன்ங் மாகாணத்தின் சான்லிசுவாங் பகுதியில் உள்ள உணவகத்தில் சுமார் 60 பேர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி கொண்டனர்.

இதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உணவகத்தில் சமையலறை இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சிக்ரெட்டை பற்ற வைத்து காரணத்தினால் விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவால் ஏற்பட்டதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: 22 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Sanlishuang ,Liawhong Province ,
× RELATED எப்ஸ்டீன் வழக்கில் 30,000 பக்க ஆவணம்...