×

இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிதாசன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வார விழா இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது.

பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது;

வேழத்தின் வலிமையோடு – திகட்டாத தீந்தமிழின் சுவையில், மடமைகளைச் சுட்டெரித்து, இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!

இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இணையரை வாழ்த்தும் போதெல்லாம், பாவேந்தர் எடுத்துச் சொல்லியபடி, வீட்டுக்கு விளக்காக – நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதையே அறிவுரையாக வழங்குகிறேன்.

குன்றிலிட்ட விளக்காகத் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!! appeared first on Dinakaran.

Tags : Isaiamudu Bavendar Bharathidasan ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Bavendar Bharathidasan ,Bharathidasan ,Chennai Mayor ,Priya ,Tamil Nadu government… ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...