×

டிரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சி

ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது. கனடா நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ததால், லிபரல் கட்சியின் தலைவரான மார்க் கார்னி பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சில வாரங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் 343 தொகுதிகளில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரும்பான்மை அரசாங்கத்திற்கு 172 இடங்கள் தேவை.

இருந்தும் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய முன்னிலை நிலவரபடி, மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியே மீண்டும் ஆட்சியமைக்்க வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தல், அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடாவுக்கு எதிரான வரிவிதிப்பு, கனடாவை 51வது மாநிலமாக அமெரிக்காவுடன் சேர்ப்பது என்பது உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் இறையாண்மை குறித்த கருத்துகளால் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் பியர் பொய்லியேவ்ரே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான போட்டியை அளித்திருந்தாலும், லிபரல் கட்சியின் திடீர் எழுச்சியால் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. இந்தத் தேர்தலில் டிரம்பின் அச்சுறுத்தல்கள் கனடா மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டியதாகவும், இதுவே லிபரல் கட்சியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற கட்சிகளான என்டிபி (ஜக்மீத் சிங்), பிளாக் கியூபெக்வா (இவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட்), கிரீன் கட்சி ஆகியவை குறைவான இடங்களையே பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

The post டிரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சி appeared first on Dinakaran.

Tags : Liberal Party ,Canada ,Trump ,Ottawa ,US ,President Trump ,Justin Trudeau ,Mark Carney ,Prime Minister.… ,Dinakaran ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...