கொள்ளிடம், ஏப். 28: கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூரில் மலையமான் கோட்டம் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வசதி அளித்து வரும் வாய்க்காலாக இருந்து வருவது மலையமான் கோட்டம் வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலை விவசாயிகள் சார்பில் தூர்வார கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று நீர்வளத்துறை சார்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலையமான் கோட்டம் பாசன வாய்க்காலை நேற்று 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணியை மேற்கொண்டு முடித்தனர். மலையமான் கோட்டம் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.
