×

மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

 

மதுரை, ஏப். 29: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண டிக்கெட் முன்பதிவு முறை இன்று முதல் தொடங்கிறது. மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான திருக்கல்யாணம் மே8ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in ல் ஏப்.29 இன்று முதல் மே 2ம் தேதி இரவு 9 மணி வரை ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச் சீட்டும் அல்லது மூன்று ரூ.200 கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்யலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டுக்களை பதிவு செய்ய முடியாது. ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணமாக குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கோயில் பணியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இன்று தொடங்கிறது.

The post மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman ,Madurai ,Chithirai festival ,Madurai Meenakshi- ,Sundareswarar ,Temple ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை