- தர்மபுரி
- தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை…
- தின மலர்
தர்மபுரி, ஏப்.29: தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு, ரூ. 61.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாட்டர் பவுச்சர் ஊர்திகள், செயற்கருவிகள் மற்றும் தளவாடங்களுடன் கொள்முதல் செய்து, ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தர்மபுரி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்திற்கு, புதியதாக வாட்டர் பவுச்சர் தீயணைப்பு ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனத்தை தர்மபுரி மாவட்ட தியணைப்பு அலுவலர் அம்பிகா இயக்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
The post ரூ.61.70 லட்சத்தில் நவீன ரக வாகனம் appeared first on Dinakaran.
