×

ஜெய்ப்பூரில் இன்று வலுவான குஜராத்துடன் மோதல்: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ராஜஸ்தான் முனைப்பு

ஜெய்ப்பூர்: 18வது ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடக்கும் போட்டியில் ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. நடப்பு சீசனில் ராஜஸ்​தான் அணி இது​வரை 9 போட்​டிகளில் ஆடி 2ல் வெற்​றி 9ல் தோல்வி என 4 புள்​ளி​களு​டன் புள்ளி பட்​டியலில் 9வது இடத்​தில் உள்​ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் தனது சொந்த ஊரில் விளை​யாட இருப்பதால் அந்த அணி வெற்​றிப் பாதைக்​குத் திரும்​பும் என ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். அந்த அணி கடைசி​யாக ஆடிய 5 போட்டிகளி​லும் தோல்வியடைந்து மோச​மான நிலை​யில் உள்​ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை ஜெய்​ஸ்​வால் சிறப்பான தொடக்கம் தருகிறார். ஆனால் நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர் ஆகியோரும் சீராக ரன் குவிப்பதில் கோட்டை விடுகின்றனர்.

அவர்​களிட​மிருந்து இன்றைய போட்டியில் சிறப்​பான பங்களிப்பை எதிர்​பார்க்​கலாம். அதே​போல் புதிய வரவான வைபவ் சூர்​ய​வன்ஷி இன்றைய போட்டியில் ஜொலிக்கலாம். பந்​து​வீச்​சில் சந்​தீப் சர்​மா, ஜோப்ரா ஆர்ச்​சர், ஹசரங்கா என வலு​வாக இருந்தாலும் துஷார் தேஷ்​பாண்​டே ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். குஜ​ராத் அணியை பொறுத்த வரை இது​வரை 8 போட்டிகளில் ஆடி 6ல் வெற்​றி, 2ல் தோல்வி என 12 புள்​ளி​களு​டன் 2ம் இடத்தில் உள்​ளது. அந்த அணியின் சாய் சுதர்​ஷன் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

கேப்​டன் கில், ஜாஸ் பட்​லர், ஷாருக் கான் என அதிரடி பேட்டிங் படை இருப்பதால் ராஜஸ்தானுக்கு இன்று சவால் காத்திருக்கிறது. இந்த சீசனில் பந்​து​வீச்​சில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிப்பை கட்டுப்படுத்துகின்றனர். எனவே தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ராஜஸ்தானும், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற குஜராத்தும் வரிந்து கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

The post ஜெய்ப்பூரில் இன்று வலுவான குஜராத்துடன் மோதல்: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ராஜஸ்தான் முனைப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Jaipur ,Rajasthan ,Rajasthan Royals ,Gujarat Titans ,IPL ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...