- தி.மு.க.
- Vembakkottai
- ஏழாயிரம்பண்ணை
- தாயில்பட்டி
- மேற்கு ஒன்றியம்
- Jayapandian
- வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம்
- சதுர் சட்டமன்றம்
- தின மலர்
ஏழாயிரம்பண்ணை, ஏப்.28: வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றியச்செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூத் முகவர்களின் செயல்பாடுகள் மற்றும் வாக்கு வங்கியை கூட்டுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு பேசினார். மேலும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
The post வெம்பக்கோட்டை அருகே திமுக பூத் கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.
