×

கோயிலில் மண்டல அபிஷேகம்

 

கீழக்கரை, ஏப்.28: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகே செந்தில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மார்ச் 10 அன்று கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் மண்டல அபிஷேக விழா நடந்தது. உத்தரகோசமங்கை ஸ்தானிகள் குருக்களால் பூஜைகள் தொடர்ந்து நடந்தது. கோயில் முன்புறம் யாகசாலை பூஜை வளர்க்கப்பட்டு கும்பத்தில் புனித நீரால் வலம் வந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை மற்றும் உலக நன்மைக்கான சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் விஜயகுமார், செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் மனுமயா கொள்தச்சு தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் விஸ்வகர்மா இளைஞர் பாசறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post கோயிலில் மண்டல அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Mandala Abhishekam ,Keezhakarai ,Senthil Murugan ,Kanchirangudi ,East Coast Road ,Kumbabhishekam ,Abhishekam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை