முத்துப்பேட்டை, ஏப். 28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(51) விவசாய கூலித்தொழிலாளியான இவரது மனைவி கஸ்தூரி(46). இவர் சமீபகாலமாக மனநிலை சரி இல்லாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 23ந்தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திறம்ப வில்லை. இதனால் அதர்ச்சியடைந்த குடும்பத்தினர் கஸ்தூரியை பல இடங்களில் தேடி அவர் கிடைக்காததால் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது கணவர் ரமேஷ் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல்போன கஸ்தூரியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஜாம்புவானோடையில் உள்ள இறால் பண்ணைகள் இருக்கும் பகுதியான கந்தபரிச்சான் ஆற்றின் மேல் கரை ஓரத்தில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கஸ்தூரி எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அரைகுறை ஆடையுடன் கிடந்ததை பார்க்கும்போது பாலியல்ரீதியான சம்பவங்கள் ஏதும் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் ஜாம்புவானோடை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post முத்துப்பேட்டை அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.
