×

கோடைகாலத்தில் உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்: உடனடி முதலுதவிகள் குறித்து ஆலேசனை

பெரம்பலூர், ஏப்.28: கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்தும், ககோடைகால நோய்களின் தாக்கத்திலும் இருந்தும் காற்றுக்கொள்வது எப்படி என பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் பிரசன்னா ஆலோசனை வழங்கியுள்ளார்.

நடப்பாண்டு அளவுக்கு அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் நன்கு திடகாத்திரமாக உள்ளவர்களும், இளம் வயது உடையோருமே கூட பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் வெட்ட வெளியில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவெ வெப்பத்தின் தாக்கதல் பாதுகாகாத்துக்கொள்ள கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் பிரசன்னா கூறிய ஆலோசனைகள்்:
இதற்காக தினமும் போதுமான அளவு நீர் பருக வேண்டும். வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள குடைகள், தொப்பிகள் பயன் படுத்த வேண்டும். நேரடியாக உடலில் படும் சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 11மணி முதல், மதியம் 3.30 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நண்பகலில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், காப்பி, டீ, மது அருந்துவதை, புகைப் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெயில் நேரங்களில் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் நடப்பதை தவிர்க்க வேண்டும். மதியவேளையில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் குழந்தைகளை விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ் கரைசல், எலுமிச்சை சர்பத், இளநீர், மோர் மற்றும் பழச் சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான இடங்களில் உறங்கவேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளைவே அணிய வேண்டும்.

வெப்பம் சார்ந்த நோய்கள்: வெப்ப நாட்களில் சூடான, வறட்சியான, சிவந்த சருமமாக இருப்பதும், உடல் வெப்பநிலை 40° டிகிரி செல்சியஸ் அல்லது 104டிகிரி பாரன்ஹீட் இருப்பதும் ஆபத்தானது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது, உடலுக்கு ஒவ்வாமல், குமட்டல் மற்றும் வாந்தி, கடுமையான தலைவலி, சோர்வு மற்றும் கால் பிடிப்பு, மூச்சுத் திணறல், நெஞ்சு படபடப்பு, தலை சுற்றல், மயக்கம், பதற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தண்ணீர் அருந்த வேண்டும்.

ஓய்வு எடுக்க வேண்டும் அல்லது அருகிலுள்ள குளிர்ச்சியான பகுதிக்கு செல்ல வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குறிப்பாக கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தாலோ, மயக்க நிலை நீடித்தாலோ உடல் வெப்ப நிலை 104 டிகிரியாக இருந்தாலோ, மற்ற அறிகுறிகள் தீவிரமடைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அல்லது தீவிர சிகிச்சைக்காக, அவசர சிகிச்சை உறுதியை அழைக்க வேண்டும்.

முதலுதவிகள் என்னென்ன செய்யலாம்?
கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் உதவிட பாதிக்கப் பட்ட நபரை குளிர்ந்த, நிழல் உள்ள, காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நிறை ஊற்ற வேண்டும். குளிர்ந்த நீரை பருக வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி ஒத்தடம் தர வேண்டும். மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடவேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் அருண் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

வெப்ப நாட்களில் சூடான, வறட்சியான, சிவந்த சருமமாக இருப்பதும், உடல் வெப்பநிலை 40° டிகிரி செல்சியஸ் அல்லது 104டிகிரி பாரன்ஹீட் இருப்பதும் ஆபத்தானது.

The post கோடைகாலத்தில் உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்: உடனடி முதலுதவிகள் குறித்து ஆலேசனை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur Government Head Hospital ,Pediatrician ,Prasanna ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை