×

களக்காடு அருகே சரள் மண் கடத்திய டிரைவர் கைது: லாரி பறிமுதல்

களக்காடு,ஏப்.28: களக்காடு அருகே சரள் மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். களக்காடு அருகேயுள்ள சடையமான்குளம் விலக்கில், நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சேகர், கனிமங்கள் துறை தனி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரள் மண்் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய அனுமதியின்றி லாரியில் சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவர்கள் லாரியையும், லாரியை ஓட்டி வந்த ஏர்வாடி அருகேயுள்ள திருவரங்கநேரியை சேர்ந்த சுடலைமணியை பிடித்து களக்காடு போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்ததுடன், டிரைவரை கைது செய்தனர்.

The post களக்காடு அருகே சரள் மண் கடத்திய டிரைவர் கைது: லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Kalakadu ,Cadayamankulam ,Nella District ,Sekhar ,Minerals Department ,Separate Revenue Analyst ,Sentilkumar ,Gravel ,Mud ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை