×

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார், பைக்குகள் பரிசு

மதுக்கரை: கோவை மாவட்டம்,செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. கோவை மாவட்ட நிர்வாகமும், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் தளபதி முருகேசன் வரவேற்று பேசுகிறார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்நாடு துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை துவக்கி வைக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் மாடுபிடி விரருக்கும்,மாட்டின் உரிமையாளர்களுக்கும் தலா ஒரு மாருதி ஷிப்ட் கார்,இரண்டாம் பரிசாக பைக்,மூன்றாம் பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டியும் வழங்கப்பட உள்ளது.அதுமட்டுமின்றி இதில் வெற்றி பெறுபவர்களுக்கும், மாடுகளுக்கும் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே மாடுகளும், மாடுபிடி வீரர்களும் மைதானம் அருகே குவிந்துள்ளனர்.  ஜல்லிக்கட்டு காளைகளையும் போட்டி நடைபெறும் மைதானத்தையும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

The post ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார், பைக்குகள் பரிசு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Madukkarai ,L&T Bypass Road ,Chettipalayam Panchayat ,Coimbatore district ,Tamil Cultural Jallikattu Association… ,Dinakaran ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...