×

மக்களின் பாதுகாப்புக்காக அனைத்து கட்சியினரும் ஒன்றிய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில் பிரதமர் தீவிரவாதத்திற்கு எதிராக விடுத்த அறிவிப்புகளும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கைகள் எடுத்து வருவதும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பலத்திற்காக ஆளுகின்ற ஒன்றிய அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

The post மக்களின் பாதுகாப்புக்காக அனைத்து கட்சியினரும் ஒன்றிய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union ,Chennai ,Tamaga ,G. K. ,Vasan ,Kashmir Bahalkam ,Union State ,G. K. Vasan ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…