×

கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள். மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23வது இடம் பெற்று சாதனை படைத்தார். இந்தியாவில் எங்கு பணியாற்றினாலும் சமத்துவம், சமூகநீதி, நேர்மையை மனதில் வைத்து மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,U. B. S. C. ,CM ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி...