×

நீர்மோர் பந்தலுக்கு அனுமதி கோரி மனு

மதுரை, ஏப். 26: மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுக சார்பில் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலுக்கு, கூடல்புதூர் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதால், அங்கு நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.மதி ஆகியோர் மனு குறித்து கூடல்புதூர் போலீசார் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post நீர்மோர் பந்தலுக்கு அனுமதி கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Neermor ,Madurai ,Sidhan ,Vilangudi ,Court ,Kudalputhur police ,Neermor Pandal ,Madurai-Dindigul road ,AIADMK ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை