×

உலக கால்நடை தினத்தையொட்டி கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை, ஏப். 26: உலக கால்நடை தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கால்நடை மருத்துவ முகாம் கொக்குளம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநர் டாக்டர் முருகன் தலைமை வைகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை திருமங்கலம் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர். சரவணன் முன்னிலை வகித்தார். செக்கானூரணி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் மாணிக்சந்தர், கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன் பாண்டிச்செல்வி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாசாணம் ஆகியோர் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.

இதன்படி கால்நடைகளுக்கான சினை பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மற்றும் செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்க மருந்து செலுத்துதல், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் 542 மாட்டினங்கள், 130 செம்மறி ஆடுகள், 622 கோழிகள், 48 நாய்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

The post உலக கால்நடை தினத்தையொட்டி கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : World Livestock Day ,Madurai ,World Veterinary Day ,Kokkulam village ,Department of Animal Care ,Dr ,Murugan ,Pedagogan Department of Madurai ,Department of Animal Husbandry Thirumangalam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை