×

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2025-2026ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2025-2026ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன். எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதற்கட்டமாக 28.04.2025 முதல் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை, பயனாளர் கையேட்டின்(User Manual) அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்தும், இரண்டாம் கட்டமாக அனைத்து உரிய ஆவணங்களையும் 28.05.2025 மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது

The post திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2025-2026ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Film and Television Training Institute ,Chennai ,Government of Tamil Nadu ,G. R. Film and Television Training Institute ,Tamil Nadu ,Dr. ,J. ,Jayalalitha ,University of Music and Kavin Arts ,Tamil Nadu Government M. G. R Film and Television Training Institute ,
× RELATED ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்...