×

மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் 21.36 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மொத்த வருமானம் ரூ.154.5 கோடி

திருவனந்தபுரம்:  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.  பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி  தரிசனமும் கடந்த 14ம் தேதி நடந்தது. 19ம் தேதி இரவு வரை பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.காணிக்கை பணம் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டதை  தொடர்ந்து மண்டல, மகரவிளக்கு காலத்தின் மொத்த வருமானம் குறித்த விவரங்களை  திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. இதன்படி  கடந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் கிடைத்த மொத்த வருமானம் ₹154.5 கோடி  ஆகும். காணிக்கை மூலம் தான் மிக அதிகமாக ₹64.46 கோடி கிடைத்துள்ளது.அடுத்ததாக அரவணை பாயசம் விற்பனை மூலம் ₹59.75 கோடியும், அப்பம் விற்பனை  மூலம் ₹7 கோடியும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில்  தரிசனம் செய்த மொத்த பக்தர்கள் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது.  அதன்படி கடந்த சீசனில் 21.36 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம்  செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் 21.36 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மொத்த வருமானம் ரூ.154.5 கோடி appeared first on Dinakaran.

Tags : Sabharimala ,Thiruvananthapuram ,Sabarimalai Iyappan Temple ,Walking Zonal Poojas ,Sabarimala ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்