×

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன்

தஞ்சாவூர், ஏப்.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்கிட பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்குவதற்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை குறைபாட்டுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Disabled Welfare Department ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை