புதுக்கோட்டை, ஏப்.25: புதுக்கோட்டையில் அகில இந்திய கட்டுனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அகில இந்திய கட்டுணர்கள் சங்க தேசிய பொறுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதன் பின்னர் தேசிய பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிரஷர் குவாரி உரிமையாளர்களின் செயற்கையான விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்டட பணிகளும் நிறுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் கிரஷர் குவாரி உரிமையாளர்கள் கிரஷரின் உற்பத்தியாக கூடிய கட்டுமான பொருட்களுக்கு செயற்கையான முறையில் விலையை ஏற்றி உள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசின் கட்டடப் பணிகள், தனியார் கட்டட பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிரஷர் குவாரி உரிமையாளர்கள் விலையை குறைக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிகளையும் நிறுத்துவதை தவிர கட்டுனர் சங்கத்திற்கு வேறு வழி தெரியவில்லை. எனவே உடனடியாக தமிழக முதல்வர் இந்த விஷயத்தை தலையிட்டு ஏற்றப்பட்ட விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
The post கிரஷர் குவாரிகளில் செயற்கையான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.
