×

அரசு ஒதுக்கிய நிலத்தை வழங்க கோரி முற்றுகை

பரமக்குடி, ஏப்.25: அரசு மூலம் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனைகளை மற்றவர்களுக்கு வழங்கியதை கண்டித்து, தாலுகா அலுவலகம் முன்பு குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி அருகே வேந்தோணி வள்ளி நகரில் 1984ம் ஆண்டு 176 குறவர் இனமக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறை சார்பில் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர், பரமக்குடி சார் ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மூன்றாண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பரமக்குடி தாலுகா அலுவலக நுழைவாயில் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 41 ஆண்டுகளுக்கு முன்பு குறவர் இன மக்களுக்கு வழங்கிய பட்டா நிலங்களை, போலியான ஆவணங்களை தயாரித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மாற்று நபர்களுக்கு வழங்கி உள்ளனர். வேந்தோணி வள்ளி நகரில் மீண்டும் குறவர் இன மக்களுக்கு பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் வரதன் கூறியதால், கலைந்து சென்றனர்.

The post அரசு ஒதுக்கிய நிலத்தை வழங்க கோரி முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Kuravar ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை