×

சென்னையில் முரசொலி செல்வம் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

* சிலந்தி கட்டுரை தொகுப்பு புத்தகம் வெளியீடு

சென்னை: சென்னையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி செல்வம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிய முரசொலி செல்வம் கடந்த அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார். இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். தொடர்ந்து சிலையின் கீழ் வைக்கப்பட்டு இருந்த அவரது புகைப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம் குடும்பத்தினர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற பெயரில் முரசொலி செல்வம் எழுதிய கட்டுரைகளை, சிலந்தி கட்டுரைகள் என்ற பெயரில் புத்தகமாக முத்தமிழறிஞர் பதிப்பகம் தொகுத்துள்ளது.

சிலந்தி கட்டுரைகள் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, முதல் பிரதியை தி.க. தலைவர் வீரமணி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வழங்கினார். இந்த நூலை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, பொன்முடி, கோவி.செழியன் உள்ளிட்டோருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.க.தமிழரசு, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் அமிர்தம், நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், கருணாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி,

பேராசிரியர் அன்பழகன் மகன் அன்புச்செல்வன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கம் மற்றும் மூர்த்தி, முன்னாள் தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன், கவிஞர் வா.மு.சேதுராமன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேங்கடாபதி, புலவர் முத்து வ.வா.சி., ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், முன்னாள் நீதிபதி கண்ணதாசன், கலைஞரின் உதவியாளர் நித்யா, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் துறைமுகம் காஜா, அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் பத்மநாபன் மற்றும் முரசொலி செல்வம் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி உணர்ச்சி பொங்க கண் கலங்கியபடி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நன்றியுரை ஆற்றினார்.

The post சென்னையில் முரசொலி செல்வம் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Murasoli ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Murasoli Selvam ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...