×

சேப்பாக்கத்தில் இன்று சென்னை சன்ரைசர்ஸ் மோதல்: நெருக்கடியில் முன்னாள் சாம்பியன்கள்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் இன்று மோத உள்ளனர். ஐபிஎல் 18வது தொடரில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடர் தோல்வியால் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்து உள்ளது. இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகள் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் 9ம் இடத்தையும், கடைசி இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ்சும் பிடித்து உள்ளது. முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் இந்த தொடரில் வரும் ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு என்ற நெருக்கடியான நிலையில் உள்ளன. இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் 43வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

* ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் சென்னை 15, ஐதராபாத் 6 ஆட்டங்களில் வென்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 223, ஐதராபாத் 192 ரன்னும், குறைந்தபட்சமாக ஐதராபாத் 134, சென்னை132ரன்னும் எடுத்துள்ளன.
* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் சென்னை 3, ஐதராபாத் 2 ஆட்டங்களில் வென்று இருக்கின்றன.
* நடப்புத் தொடரில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் ஆடி தலா 2 வெற்றி, 6 தோல்விகளுடன் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன.
* எனினும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் 9வது இடத்திலும், சென்னை கடைசி இடத்திலும் உள்ளன.
* சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் அரங்கில் இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 4 ஆட்டங்களிலும் சென்னை தான் வென்றுள்ளது.

The post சேப்பாக்கத்தில் இன்று சென்னை சன்ரைசர்ஸ் மோதல்: நெருக்கடியில் முன்னாள் சாம்பியன்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai Sunrisers ,Chepauk ,Chennai ,Chennai Super Kings ,Sunrisers ,Chepauk stadium ,Hyderabad ,IPL ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்