×

மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை திமுகவில் பயணித்தவர் முரசொலி செல்வம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை : முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை மாலையில் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பான அறிவிப்பில், “திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு,பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கழகத்தில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து வழிநடத்திய மதிப்பிற்குரிய ‘முரசொலி செல்வம்’ அவர்களின் பிறந்தநாளான இன்று மாலை,35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது, அவரது ‘சிலந்தி கட்டுரைகள்’ நூல் வெளியிடப்படுகிறது.சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்! வெல்வோம்!”இவ்வாறு தெரிவித்தார்.

The post மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை திமுகவில் பயணித்தவர் முரசொலி செல்வம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : MURASOLI WEALTH ,PUPIL ,DIMUGU ,PRINCIPAL ,M.U. K. Stalin ,Chennai ,Murasoli Selvam ,Thiruvuru ,K. Stalin ,Dravitha ,Director General ,A. D. The Paneer Selvam ,Archbishop ,Anna ,Murasoli Richam ,Dimugal ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!