×

குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: மலை ரயில் சேவை பாதிப்பு!

 

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடர்லி மற்றும் ஷில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் 21 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோத்தகிரியில் 11 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்துள்ள மணல் மற்றும் கற்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

Tags : Coonoor ,Nilgiris ,Nilgiris district ,Ooty mountain train ,Nilgiris… ,
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...