×

தொழிற்சாலைகள் உள்ள மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை :தொழிற்சாலைகள் உள்ள மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பேரவையில் அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வாறு பதில் அளித்துள்ளார். சிப்காட் உள்ள சூளகிரியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்க கருத்துரு பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

The post தொழிற்சாலைகள் உள்ள மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,Adimuga ,MLA ,K. B. ,Munusamy ,Chipcat ,Sendil Balaji ,Dinakaran ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...