×

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை

ஈத்தாமொழி: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை ேசர்ந்தவர் விஜய் (24). முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாகனங்களில் ஏற்றும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் விஜய்க்கு ஆன்லைன் சூதாட்ட பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் ₹10 லட்சம் வரை இழந்துள்ளார். பெற்றோர் அறிவுரை கூறியும் சூதாட்டத்தை கைவிடவில்லை. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அனந்தநாடார்க்குடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விஜய்  வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று காலை இரட்டைக்குளம் அருகே உள்ள தோப்பில், விஜய் இறந்து கிடந்தார்.  தகவலறிந்து ராஜாக்கமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆன்ைலன் சூதாட்டத்தில் பண இழப்பு ஏற்பட்டதால்  கடும் மன அழுத்தத்தில் இருந்த விஜய், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது….

The post ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vijay ,Kumari ,Rajakkamangalam ,Mudtam Private Fishing Port ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch