- உலக புத்தக தினம்
- முத்துப்பேட்டை
- குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- திருவாரூர் மாவட்டம்
- குன்னலூர்,
- பஞ்சாயத்து…
- தின மலர்
முத்துப்பேட்டை, ஏப். 24: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம் விழா கொண்டாடப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினவிழா கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் இரா.முருகேசன் தலைமை வகித்தார்.
இதில் மாணவர்கள் மத்தியில் புத்தகங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களில் தங்களுக்கு விருப்பமான நூல்களை எடுத்து விரும்பி வாசித்தனர். இதில் ஆசிரியர்கள் தமிழரசி, உதயா, பாரதி, கருணாநிதி, சீனிவாசன், காவியா, ஜெயந்தி, பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா appeared first on Dinakaran.
