- வைத்தீஸ்வரன்கோவில்
- சீர்காழி
- முடவன் பள்ளத்தாக்கு
- வைத்தீஸ்வரன்கோவில் பஞ்சாயத்து
- மயிலாதுதுரை மாவட்டம்
- தின மலர்
சீர்காழி, ஏப். 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு வெளி தெருவிற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள முடவன் வாய்க்காலில் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு மேல் பகுதியில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் அந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் சுவாமிகள் வீதி உலா செல்லும் போது மின் கம்பிகள் உராய்வு ஏற்படும் நிலையில் இருந்து வருகிறது. இதனால் சுவாமிகள் வீதி உலா செல்லும்போதும் கனரக வாகனங்கள் செல்லும் போதும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மின் கம்பிகளை மரங்களை பயன்படுத்தி உயர்த்தி பிடித்து பின்பு சுவாமிகள் வீதி உலா செல்லும் நிகழ்வும் கனரக வாகனங்கள் செல்லும் நிகழ்வும் நடந்து வருகிறது.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி தெற்குவெளி தெருவில் செந்தில் என்பவர் உயிரிழந்த போது அந்த உடலை வாகனத்தில் வைத்து எடுத்து செல்லும்போது மின்சாரத்தை நிறுத்தி விட்டு பின்பு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மரங்களைக் கொண்டு உயர்த்தி பிடித்து எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வைத்தீஸ்வரன்கோவிலில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் சிரமம் appeared first on Dinakaran.
