×

சங்கரன்கோவில் அருகே எரிந்த நிலையில் ஆண் உடல்

சங்கரன்கோவில், ஏப்.24: சங்கரன்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று காலை சுமார் 55 வயதில் ஆன ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து சின்ன கோவிலாங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். போலீசார் நடந்த விசாரணையில் எரிந்த நிலையில் கிடந்தவருக்கு சுமார் 55 முதல் 65 வயது இருக்கலாம். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு எரித்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சங்கரன்கோவில் அருகே எரிந்த நிலையில் ஆண் உடல் appeared first on Dinakaran.

Tags : Sankarankovil ,Tenkasi district ,Nellai… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை