×

வருஷாபிஷேக விழா

ஏரல், ஏப். 24: சாயர்புரம் மெயின் பஜாரில் உள்ள அதிர்ஷ்ட விநாயகர் கோயிலில் 26வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிர்ஷ்ட விநாயகர் கோயில் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனை நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பொன்ராஜ், பொறுப்பாளர் பால்பட்டு மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post வருஷாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Varushabhishekam ceremony ,Eral ,annual ,Lucky Vinayagar Temple ,Sayarpuram Main Bazaar ,Ganapathy Puja ,Thiruvilakku Puja ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை