- மன்னார்குடி
- ஆரோக்கியம்
- சுகாதார நுண்ணறிவு
- உதவியாளர்
- பாஸ்கரன்
- மன்னார்குடி தாலுக்கா
- திருவாரூர் மாவட்டம்
- தின மலர்
மன்னார்குடி, ஏப். 23: மன்னார்குடி வட்டத்தில் நடந்து வரும் குடும்ப உறுப்பினர்கள் பதிவேடு சிறப்பு முகாமை மாவட்ட சுகாதார புலனாய்வு உதவி இயக்குனர் பாஸ்கரன் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மன்னார்குடி நகர ஆரம்ப சுகா தார நிலையம் மற்றும் கூத்தா நல்லூர் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார விபரங்கள் அடங்கிய மேம்பட்ட குடும் பப் பதிவேடு பதிவு செய்யும் பணியை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இலக்கியா மேற்பார்வையில் நடந்து வருகிறது.
இதன் மூலம், அந்தந்த பகுதிகளில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் பெயர், வயது, ஆதார் எண், வேலை, வளர் இளம் குறித்த பெண்கள் விபரம், சர்க் கரை நோயாளிகள் பற்றிய விபரம் என அனைத்து விபரங்களும் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடி வட்டத்தில் நடந்த குடும்ப உறுப்பினர்கள் பதிவேடு சிறப்பு முகாமை மாவட்ட சுகாதார புலனாய்வு உதவி இயக்குனர் பாஸ்கரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post மன்னார்குடியில் குடும்ப உறுப்பினர் பதிவேடு சிறப்பு முகாம்: சுகாதார புலனாய்வு உதவி இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.
