×

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்,ஏப்.23: தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் என 420 பேர் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அரசாணையின்படி ஓட்டுனர்கக்கு ரூ.798, தூய்மை பணியாளர்களுக்கு ரூ.760 வீதம் கணக்கிட்டு தினக்கூலியாக மாதந்தோறும் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஆனால் இதன்படி முறையாக ஊதியம் வழங்கப்படாததால் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ, வருங்கால வைப்பு நிதி தொகையை ஓராண்டிற்கு மேல் கட்டாததை கண்டித்தும், வீடு கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து மாநராட்சி சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தப்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் நேற்று முதல் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.இந்நிலையில் நேற்று தூய்மை பணிகளுக்கு வேறு ஆட்களை வைத்து பணி செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி அவர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்வர்கள் உடனடியாக நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். சிலரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒப்பந்த தூய்மைதொடர்ந்து அலுவலகத்தின் வெளியே 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

The post 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Corporation ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை