×

பெரம்பலூரில் வரும் 30ம் தேதி நடக்கிறது மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர்,ஏப்.23: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் தலைமையில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.

விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் அன்றைய தினம் நடை பெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறை களை தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் வரும் 30ம் தேதி நடக்கிறது மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District Farmers' Grievance Day ,Perambalur ,Perambalur District Farmers' Grievance Day ,District Collector ,Grace Bachao ,Perambalur District Collector ,Agriculture and Farmers' Welfare Department ,District ,Farmers' Grievance Day ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...