- திருத்தந்தை பிரான்சிஸ்
- வேலங்கண்ணி கதீட்ரல்
- நாகப்பட்டினம்
- அவர் லேடி ஆஃப் ஹெல்த் பசிலிக்கா
- வேளாங்கண்ணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
நாகப்பட்டினம், ஏப். 23: 266வது போப் பிரான்சிஸ் இறந்தையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அன்றாட வந்து செல்கின்றனர். இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த 266வது போப் பிரான்சிஸ் உடல் நல குறைவின் காரணமாக காலமானார். இதை நினைவு கூறும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் போப் உருவப்படத்தை வைத்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு வயது 88 என்பதை குறிக்கும் வகையில் 88 முறை மணி அடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது குறித்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தெரிவித்ததாவது: போப் பிரான்சிஸ் தான் பிறந்த நாடான இத்தாலியில் இருந்து அகதியாக அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். அங்கு அகதியாக வந்ததை நினைவு கூறும் வகையில் அங்குள்ள அகதிகளுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் கடுமையாக உழைத்தார். மேலும் எல்லா சமய நாட்டுத் தலைவருடனும் இணக்கமாக இருந்தார். போப் மறைவை முன்னிட்டு வாட்டிகன் நாட்டில் கொடியானது அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த துக்க அனுசரிப்பு 9 நாட்களுக்கு நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post போப் பிரான்சிஸ் மறைவு: வேளாங்கண்ணி திருத்தலத்தில் 88 முறை மணி அடித்து அஞ்சலி appeared first on Dinakaran.
