விருதுநகர், ஏப்.23: பழைய ஓய்வூதி திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி விருதுநகரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர். விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் இருந்து ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் எம்.ஜி.ஆர் பேரணியாக சென்றனர். பேரணியில் 1.4.2003க்கு பிறகு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்கத்தொகை உயர்வை வழங்க வேண்டும். தொடக்கல்வித்துறையில் வேலை செய்யும் 90 சதவீத ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்ற பேரணி தேசபந்து மைதானத்தில் நிறைவுற்றது.
The post பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டே ஜியோ அமைப்பு பேரணி appeared first on Dinakaran.
