×

செந்துறை பகுதியில் இன்று ‘கரண்ட் கட்’

நத்தம், ஏப். 23: நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று (ஏப்.23ம் தேதி, புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, மணக்காட்டூர், மங்களப்பட்டி, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post செந்துறை பகுதியில் இன்று ‘கரண்ட் கட்’ appeared first on Dinakaran.

Tags : Senthurai ,Natham ,Senthurai Sub-station ,Madhavanayakkanpatti ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை