- அமைச்சர் செந்தில் பாலாஜி
- சென்னை
- மதுவிலக்கு மற்றும் கலால் துறை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டிற்கான இலக்காக மேலாண்மை அலகு உருவாக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் 11,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17,903 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 2016-2021 ஆகிய 5 ஆண்டுகளில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்து, பத்து ரூபாய்க்கு மேலும் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்ட வகையில் 15,405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அவர்களிடமிருந்து 14 கோடியே 83 லட்சத்து 86 ஆயிரத்து 690 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கின்றன. இது கடந்த கால ஆட்சியில் நடந்தது. இப்போது இந்த நான்கு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக, ஏறத்தாழ 6 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரத்து 47 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த பணியாளர்களிடமிருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சில பேர் பணியிடை மாற்றம், சில பேர் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்தை வெளியில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார்.
இதுபோல கருத்துகள் அதாவது 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்கிறார்கள், அதனால் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்கிற மாதிரியான அவதூறான கருத்துக்களை, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியில் சென்று பேசுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் இந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டு, அவருடைய 5 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, எவ்வளவு தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொண்டு, அந்தக் கருத்துகளை முன்வைக்க வேண்டும்
The post போதைப்பொருள் வழக்குகளில் 17,903 குற்றவாளிகள் கைது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.
