×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு!

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4..30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 25.4.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக – பா.ஜ.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இதுவாகும். மே 2ல் அதிமுக செயற்குழு கூட உள்ள நிலையில் அதற்கு முன்பு மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்த உள்ளார்.

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuka District Secretaries ,Adimuga ,Raiappetta ,All India ,Anna Drawita ,Metropolitan District Secretaries Meeting ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்