×

80 குழந்தைகள் பலி குறித்து பேசிய மருத்துவர் கபீல் கான் யோகியை எதிர்த்து போட்டி: கோரக்பூரில் பரபரப்பு

கோரக்பூர்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார் என மருத்துவர் கபீல் கான் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு 80 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர். ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனத்திற்கான தொகையை மாநில அரசு தராததால்தான் இந்த அவலம் நேர்ந்ததாக அப்போது பணியில் இருந்த மருத்துவர் கபீல்கான் கூறினார். இவரது பேட்டி, தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மருத்துவப் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி மருத்துவர் கபீல் கானை உத்தரப்பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்ததுடன், அவரை கைதும் செய்தது. இவ்விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். கடந்த 5 ஆண்டுகளாக பணியிடை நீக்கத்தில் இருந்து வரும் கபீல் கான், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில் அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக தான் போட்டியிட உள்ளதாகவும், தனக்கு எந்த கட்சி தனக்கு வாய்ப்பளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருப்பதாக கூறியுள்ளார். யோகியை எதிர்த்து கபீல் கான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் கோரக்பூரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது….

The post 80 குழந்தைகள் பலி குறித்து பேசிய மருத்துவர் கபீல் கான் யோகியை எதிர்த்து போட்டி: கோரக்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : doctor ,Kabil Khan ,Yogi ,Gorakpur ,Gorakhpur ,Chief Minister ,Yogi Adityanam ,Uttar Pradesh Assembly elections ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...