×

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கருர், ஏப். 22: கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து கழக கரூர் மண்டல தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பனிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி செந்தில்குமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர் பழனிசாமி, மண்டல செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Karur ,Tamil Nadu Transport Corporation Karur Zone Workers' Association ,Administrator ,Senthilkumar ,Transport Corporation Ice ,Cream Parlor ,Thirumanilayur, Karur ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...