×

பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு கூட்டம்

மதுரை, ஏப். 22: தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தொழிலாளர் நலத்துறை சார்பில் ‘பெயர் பலகை வைப்பது கட்டாயம்’ என்ற விழிப்புணர்வு கூட்டம் நேற்று சிந்தாமணி மற்றும் அனுப்பானடி பகுதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தொழிற்சாலை துறை, தொழிலாளர் துறை, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துறை அதிகாரிகள் உட்பட பல பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளான திருமுருகன், விஜயன், பாலசுப்ரமணியன் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெயர் பலகை இல்லாமல் செயல்படும் எந்தவொரு நிறுவனமும் தொழிலாளர் பாதுகாப்பு விதிகளை மீறுவதாகும். இதனை திருத்தி, சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தினர்.

The post பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chinthamani ,Anupanadi ,Labour Welfare Department ,Labour Welfare Department… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை