கொடைக்கானல், ஏப்.22: கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டத் துவங்கி உள்ளது. இந்த சீசனை ரசிக்கும் வண்ணம் நாள்தோறும், சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ரசிக்கும் இடங்களில் ஒன்று கொடைக்கானல் ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்வது என்பது அலாதியான ஒரு அனுபவமாகும். இந்த ஏரியில் நகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்டவை சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அதிக சுற்றுலா பயணிகள் வருகையால், ஒவ்வொரு படகு இல்லங்களிலும் பழுதடைந்து உள்ள படகுகள் அனைத்தும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
கொடைக்கானல் கலையரங்கம் அருகில் உள்ள நகராட்சி படகு குழாமில் இருந்த சேதமான படகுகள் அனைத்தும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த படகுகள் தயாரானால் கூடுதல் பயணிகள் இந்த படகுகளில் பயணம் செய்ய முடியும். இதேபோன்று கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு இல்லத்தில் சேதமான படகுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
The post கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் படகுகள் appeared first on Dinakaran.
