- தோட்டக்கலை
- ஊட்டி
- தினம்
- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- மாவட்ட கலெக்டர்
- லக்ஷ்மி பவ்யா
- கொடி நாள்
- தின மலர்
ஊட்டி, ஏப்.22: கொடிநாள் வசூலில் சாதனை படைத்த தோட்டக்கலைத்துறை இணை இயக்குநருக்கு 30 கிராம் வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஊட்டியில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கிக்கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்களை பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2022ம் ஆண்டு, 100 சதவீதம் கொடிநாள் வசூல் செய்ததற்கு தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரிக்கு 30 கிராம் மதிப்பில் வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தால் பதிவுப்பெற்ற 4 உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணந்த குடிமைப்பணிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 நபர்களுக்கு பேரூராட்சி துறைகளில் வரித்தண்டலர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிசாமி (நிலம்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்கண்ணன், உதவ இயக்குநர் (பேரூராட்சிகள்) முகமதுரிஸ்வான், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் (பொ) இந்திராகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post கொடிநாள் வசூலில் சாதனை படைத்த தோட்டக்கலைத்துறை இணை இயக்குநருக்கு 30 கிராம் வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் appeared first on Dinakaran.
