- புதுச்சேரி
- மாநில மேகே பகுதி
- துல்லூர் காவல் நிலையம்
- முன்டினம் ரோந்து
- மகுனி-கொப்பலம் பிரதான சாலை
- பந்தகல்
- தின மலர்
புதுச்சேரி, ஏப். 22: புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியம் பள்ளூர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பந்தக்கல் பகுதியில் மக்குனி- கொப்பளம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுபான கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் பந்தக்கல் பகுதியை சேர்ந்த பிரேமன் (58) மற்றும் கோழிகோடு பகுதியை சேர்ந்த காந்த (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
The post புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.
