×

மகிந்திரா குழுமத்தின் Automotive Business தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுசாமி நியமனம்

மஹிந்திரா நிறுவனத்தின் வாகன தொழில்நுட்பம், இயந்திர வடிவமைப்புப் பிரிவு தலைவராக இருந்த வேலுசாமிக்கு வாகன வர்த்தகப் பிரிவுத் தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வாகனத் தயாரிப்பின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரையான அனைத்துப் பணிகளும் வேலுசாமியிடம் ஒப்படைப்பு. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுசாமி மகிந்திரா நிறுவனத்தில் 1996 முதல் பணியாற்றி வருகிறார். மஹிந்திராவின் எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.

The post மகிந்திரா குழுமத்தின் Automotive Business தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுசாமி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Velusamy ,Tamil Nadu ,Mahindra Group ,Automotive ,Technology ,Design ,Mahindra Company ,Vehicle Trade ,Namakkal District ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...